வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (27/02/2018)

கடைசி தொடர்பு:11:40 (27/02/2018)

மாற்றுத்திறனாளிகள் நிகழ்த்திய சாகசங்கள்! அதிர்ந்த கலைநிகழ்ச்சி

மாற்றுத் திறனாளி

சென்னையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி  மைதானத்தில், கடந்த ஞாயிற்றுகிழமை (25/02/2018),  'அருணா&ரேஜிங் சன்' என்ற பெயரில், மாற்றுத்திறனாளிகளின் மிகப் பெரிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற முக்கிய கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். 

மாற்றுத்திறனாளி

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைநிகழ்ச்சி நிறுவனங்களான யூகே-யைச் சேர்ந்த கிரெய் (greae theatre) மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லா ஃபுராடெல்ஸ் பவுஸ்(LA fura del baus) ஆகியவை ஒருங்கிணைந்து, இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது. மற்றும், அவர்களது திறன்களை மேம்படுத்துவதற்கும் அவர்களது உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது. 24 மீட்டர் உயரமான பொம்மலாட்ட பொம்மைகள், வாணவேடிக்கைகள், வியக்கவைக்கும் வான்வெளி சாகசங்களை மாற்றுத்திறனாளிகள் செய்துகாட்டினர்.

மாற்றுத் திறனாளி

இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளின் சமுதாயத்துக்கு உதவும் ஒரு மாற்றுத்திறனாளி சூப்பர் ஹீரோவின் கதையை ஆழகாக எடுத்துக் கூறினார்கள். ஆர்ட்ஸ் கவுன்சில் இங்கிலாந்து மற்றும் பிரிட்ஷ் கவுன்சில் ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.