`கடவுள் முருகன் மாதிரி அறிவா பேசுவாரு சிம்பு!’ - கலகலத்த டி.ராஜேந்தர்!

தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்பதால்,  நாளை முக்கிய முடிவை அறிவிக்க உள்ளதாக டி.ராஜேந்தர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

டி.ராஜேந்தர்

பிரபல நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், லட்சிய தி.மு.க என்ற பெயரில் கட்சி தொடங்கி, செயல்பட்டுவருகிறார். சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அலுவலகத்தில் விழா ஏற்பாடுசெய்து அசத்தினார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'வரும் 28-ம் தேதி, என் அரசியல் வாழ்வின் முக்கிய முடிவை அறிவிப்பேன்’ என்றார். அவரின் நிலைப்பாடு என்ன என்பது நாளை தெரியவரும்.

இந்நிலையில், இன்று திருச்சியில் பேட்டியளித்த  டி.ராஜேந்தர், ’தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்ற முடிவில் நாளை முக்கிய முடிவை எடுக்க உள்ளேன். மாற்றத்தைக் கொண்டுவருகிறேனோ இல்லையோ, எனது முடிவில் இருக்காது தடுமாற்றம். மூன்று நாளில் கட்சி ஆரம்பிக்கிறவர்கள், முதல்வர் ஆக நினைக்கிறார்கள். என் மகன் சிலம்பரசன், கடவுள் முருகன் மாதிரி அறிவுடன் பேசக்கூடியவர்.  மேலும், ஜாதகம் நன்றாக உள்ளவர்கள் தமிழக அரசியலில் ஜெயிப்பார்கள்’ என்று பேசினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!