`ஜெயலலிதா இருந்தபோதே முதலமைச்சர் ஆக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன்!' - அமைச்சர் தங்கமணி தாக்கு

ஜெயலலிதா  உயிருடன் இருந்தபோதே, முதலமைச்சர் ஆக டி.டி.வி. தினகரன் சதித்திட்டம் தீட்டியதாக, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார். 

அமைச்சர் தங்கமணி


தருமபுரியில் நேற்று (26.2.2018) இரவு, அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிடோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கமணி, `33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து, அவரைப் பார்த்துக்கொண்டதாக அவர்கள் கூறுகிறார்களே, இருந்தும் அவர்களுக்கு கட்சிப் பதவியோ அல்லது அரசில் ஒரு பதவியோ அளிக்கவில்லை. அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே, கடந்த 2008-ம் ஆண்டில் முதலமைச்சர் ஆக தினகரன் சதித்திட்டம் தீட்டினார். ஊழல் வழக்கில் எப்படியும் ஜெயலலிதா சிறை சென்றுவிடுவார். ஆகவே, ஆட்சிப் பொறுப்பை நாம் பிடித்துவிடலாம் என்று அவர் கணக்குப் போட்டார். ஆனால், இந்த சதித்திட்டத்தை அறிந்த ஜெயலலிதா, தினகரனை கட்சியை விட்டே ஒதுக்கிவைத்தார்’ என்று பேசினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!