பள்ளிக்குச் செல்ல மறுத்த மகனுக்குத் தந்தை கொடுத்த அதிர்ச்சித் தண்டனை!

ள்ளிக்குச் செல்ல மறுத்த மகனை மின்கம்பத்தில் கட்டிவைத்து தந்தை கொடுமை செய்துள்ள சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளி செல்ல மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை

வெட்ட வெயிலில் அந்தச் சிறுவனை தந்தை கட்டி வைத்துள்ளார். சிறுவன் வெயில் சூட்டினால் கதறி அழுதுள்ளான். தந்தையோ அதை பொருட்படுத்தவில்லை. இது குறித்து பத்ராச்சலம் மாவட்ட உதவி ஆட்சியருக்குப் புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சிறுவனை  மீட்டனர். கமலாப்பூர் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தண்டனைக்குள்ளான மாணவன் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் கடந்த ஒரு வாரகாலமாக ஊருக்குள் சுற்றியதால் சிறுவனின் தந்தை இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். சிறுவனை மின்கம்பத்தில் கட்டிவைத்த புகைப்படம் இணையங்களில் பரவியதையடுத்து, கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

சிறுவனின் பெற்றோருக்கு கவுன்சலிங் அளிக்கப்பட்டுள்ளது. சிறார் நல அமைப்பு, பெற்றோரிடமிருந்து சிறுவனை விடுவித்து அரசு விடுதியில் பராமரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் தந்தை குடித்துவிட்டு வந்து தன்னைக் கொடுமைப்படுத்துவதாக தந்தைமீது போலீஸ் நிலையத்தில் சிறுவன் ஒருவன் புகார் அளித்தான். தொடர்ந்து, தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!