`ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத விபத்தே' - துபாய் அரசு அதிகாரபூர்வத் தகவல்

ஶ்ரீதேவியின், தடயவியல் மற்றும் உடற்கூறு ஆய்வறிக்கைகளைக் கொண்டு விசாரணை செய்து வந்த துபாய் அரசு வழக்கு தரப்பு ஶ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான `நோ அப்ஜெக்‌ஷன்' முன்னதாக இன்று வழங்கியிருந்தது. 

ஶ்ரீதேவி

இதைத் தொடர்ந்து துபாய் ப்ராஸிக்கியுஷன் தரப்பில் பதியப்பட்ட வழக்கின் விசாரணையை முடித்து அதில் ஶ்ரீதேவியின் மரணம் விபத்து என வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.   

இது தொடர்பாகத் துபாய் ஊடக அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், துபாயின் அனைத்து சட்டத்திட்டங்களுக்குட்பட்டு இப்படிப்பட்ட மரண சம்பவங்களில் மேற்கொள்ளப்படும் எல்லாவித வழிமுறைகளும் பின்பற்றப்பட்டிருப்பதாகவும் தடயவியல் சோதனை அறிக்கையில் கூறியபடி ஶ்ரீதேவியின் மரணம் நீரில் மூழ்கிய விபத்தாலேயே நடந்துள்ளதாகவும் இந்த வழக்கின் அனைத்து விதமான விசாரணைகளும் இத்துடன் முடிக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஶ்ரீதேவி உடல் எம்பாமிங் செய்தவுடன் இந்திய நேரப்படி 6.30 மணியளவில் தனி விமானம் மூலம் மும்பை கொண்டுவரப்படவுள்ளது. மும்பை நகரிலுள்ள பவன் ஹான்ஸ் என்ற இடத்தில் ஶ்ரீதேவியின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பால் ஶ்ரீதேவியின் மரணத்தைச் சூழ்ந்திருந்த பல விதமான கேள்விகளும் யூகங்களும் முடிவுக்கு வந்துள்ளன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!