வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (27/02/2018)

கடைசி தொடர்பு:21:20 (27/02/2018)

பள்ளிக்குச் சென்ற மாணவனின் உயிரைப் பறித்த அரசுப் பேருந்து!

அரசு பேருந்து- மாணவன்

திருப்பூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பின்னலாடை தொழிலாளிகளான ரவி - கீதா தம்பதியரின் இளைய மகன் பிரசாந்த். தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த பிரசாந்த்தை, இன்று காலை அவரின் மாமா மகாலிங்கம் என்பவர் பள்ளியில் சென்றுவிட அழைத்துச் சென்றிருக்கிறார். வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட அவர்கள், கரையாம்புதூர் என்ற பகுதியைக் கடக்கும்போது, எதிரே கோவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின்மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதில் பள்ளிச் சிறுவன் பிரசாந்த்துக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்த சிலர், உடனடியாக அவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே சிறுவன் உயிரிழந்தார். இதுதொடர்பாகக் காவல்துறை தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.