வெளியிடப்பட்ட நேரம்: 01:49 (28/02/2018)

கடைசி தொடர்பு:01:49 (28/02/2018)

ரயில்வே துறையில் 8 கோரிக்கைகள்!- ஆர்ப்பாட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள்

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு முன்பு மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மாற்றுத் திறனாளிகளோடு அவர்களின் பாதுகாவலர்களும் கலந்துக் கொண்டார்கள்.

இதுபற்றி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் அம்மாசி, ''மாற்றுத் திறனாளிகளுக்கென்று தனியாக டிக்கெட் கவுண்ட்டர்கள் இருக்க வேண்டும். பெரிய ரயில்வே ஸ்டேஷன்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென்று வீல் சேர் இருக்கிறது. ஆனால் சிறிய ரயில்வே ஸ்டேஷன்களில் வீல் சேர் இல்லை.

தடையில்லா பிளாட்பாரம் வசதி இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் வண்டிகளை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளக் கூடிய வசதி செய்து கொடுக்க வேண்டும். அதேபோல ரயில்வே ஸ்டேஷனில் மாற்றுத் திறனாளிகளுக்கென்று தனியாக ஓய்வெடுக்கும் அறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். அதே போல இலவச கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு டிக்கெட் உறுதி செய்த பிறகு அவர்களின் இருக்கை குறித்து அறிவிப்பு செய்ய வேண்டும். ரயில் நிலைய அளவில் மாற்றுத்திறனாளி கமிட்டி அமைக்க வேண்டும்' என்று கோரிக்கைவிடுத்தனர்.