வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (28/02/2018)

கடைசி தொடர்பு:13:14 (28/02/2018)

ஜல்லிக்கட்டுப் போட்டியில் வர்ணனையாளராக அசத்திய ஏ.டி.எஸ்.பி!

திண்டுக்கல் பில்லமநாயக்கன்பட்டியில் நடந்துவரும்  ஜல்லிக்கட்டுப் போட்டியில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஏ.டி.எஸ்.பி., சீனிவாசன், அவ்வப்போது வர்ணனையாளராகவும் மாறி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். 


திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டியில் ஐல்லிக்கட்டு நடந்துவருகிறது. 400-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.எஸ்.பி., சீனிவாசன் தலைமையிலான போலீஸார் செய்துவருகிறார்கள். வாடிவாசலுக்கு மேல்பக்கம், அறிவிப்பாளர் அமரும் இடத்திலிருந்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசின் விதிமுறைகளின்படி ஐல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்துவருகிறதா என்பதைக் கண்காணித்துக்கொண்டுள்ள ஏ.டி.எஸ்.பி., சீனிவாசன், மைக் மூலமாக போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் ஆலோசனை வழங்கிக்கொண்டிருந்தார்.

துள்ளலுடன் மாடுபிடி வீரர்களை மிரட்டும் தொனியில் காளைகள் வரும்போது, `நல்ல மாடு...பரிசை அள்ளிக் கொடுங்க...சூப்பர் மாடுய்யா' என அவ்வப்போது கமென்ட் கொடுத்துக்கொண்டே இருந்தார். இது, பார்வையாளர்களைக் கவர்ந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்துக்கொண்டே, ஜல்லிக்கட்டு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வரும் ஏ.டி.எஸ்.பி., சீனிவாசனின் இந்த அணுகுமுறையை உள்ளூர் மக்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க