வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:14:00 (28/02/2018)

ஜெயேந்திரருக்கு இறுதி அஞ்சலி எப்போது? சங்கர மடம் தகவல்

காஞ்சிபுரம் சங்கர மடம் மடாதிபதி ஜெயேந்திரர், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். சங்கர மடத்தில், ஜெயேந்திரரின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயேந்திரர்

அவரது இறுதிச்சடங்கு பற்றி சங்கர மட செய்தித் தொடர்பாளர் காமேஸ்வரிடம் பேசினோம், “உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சத்குருவாகத் திகழக்கூடியவர். பல அரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர். பல ஆன்மிக ஆசிரியர்களை உருவாக்கியவர். உலகம் முழுவதிலும் பல இடங்களில் அவரது மாணவர்கள் இருக்கிறார்கள். அவர், மோட்சமடைவதற்காக சித்தியடைந்திருக்கிறார். அவர் மோட்சம் அடைவதற்காக முத்திநாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாலகிராமை, அவர் தலைமீது வைத்து அபிஷேகம் செய்வார்கள். பாலபிஷேகம், தேனபிஷேகம் போன்ற அபிஷேகங்களையும் செய்வார்கள். அவர், மோட்ச நிலையை அடைவதற்காக, மடத்தின் சார்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் அனைத்து மந்திரங்களையும், வேதங்களையும் ஓதுவார்கள். அவர், ஜீவசமாதி நிலையில் பெரியவர் அடக்கம்செய்யப்பட்ட இடத்தில், மோட்ச கபால நிலையை அவருக்கு ஏற்படுத்திக்கொடுத்து, அவருடைய ஆத்மா இறைவனை அடைவதற்கான பூஜைகளைச் செய்வோம். அங்கே, பலரும் வழிபாடுகள் செய்யக்கூடிய அளவில் பூஜைகள் நடைபெறும். நாளை காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மோட்ச தீபம், நெய் தீபம் ஆகியவை ஏற்றி வழிபாடு செய்யப்படும்.

காமாட்சி அம்மன் கோயிலில், கடந்த வாரத்திலிருந்து பிரம்மோற்சவம் நடக்கிறது. அதற்காக கோயிலில் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. சுவாமியை பல்லக்கில் வைத்து தீபாராதனை செய்து, பூஜைகள்  செய்திருக்கிறார்கள். பூஜை முடிந்ததும் கதவு சாத்தப்பட்டிருக்கிறது. கோயிலில் விசேஷ பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்” என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க