வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (28/02/2018)

கடைசி தொடர்பு:19:20 (28/02/2018)

கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது `சரஹா' ஆப்! காரணம் என்ன?

சரஹா

கடந்த வருடத்தின் வைரல் விஷயங்களில் சரஹா ஆப்க்கு தனி இடமுண்டு. யார் வேண்டுமானாலும் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ஒரு செய்தியையோ அல்லது தகவலையோ சரஹா ஆப்பை பயன்படுத்துபவருக்கு அனுப்ப முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். அதன் காரணமாகவே மிகக் குறுகிய நாள்களில் உலகம் முழுவதும் மிகப்பிரபலமான இது அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் இடம் பிடித்தது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபிதீன் தஃபீக் என்ற டெவலப்பரால் உருவாக்கப்பட்டிருந்த இது பிரபலமானது அவருக்கே சர்ப்ரைஸ்தான்.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது சரஹா ஆப். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கத்ரீனா காலின்ஸ் என்பவர் தனது 13 வயது மகளுக்கு தொடர்சியாக மிரட்டல் விடுக்கும் வகையில் செய்திகள் அனுப்பப்படுவதாகக் குற்றம் சாட்டியிருந்தார். அவரின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இதில் அனுப்பப்படும் தவறான நோக்கம் கொண்ட செய்திகளைத் தடுப்பதற்கான வழிகள் மேம்படுத்தப்படும் என்று இந்த ஆப்பை உருவாக்கியவர் தெரிவித்திருக்கிறார்.