இந்துக்கள், சீக்கியர்கள் உதவியுடன் கட்டப்படும் மசூதி - மத நல்லிணக்கத்தைப் பேணும் கிராமம்!

பஞ்சாப் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்கு இந்துக்கள் நிலம் அளித்தும் சீக்கியர்கள் நிதி அளித்தும் உதவி செய்துள்ள நெகிழ வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

மசூதி

பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் உள்ள மூம் கிராமத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இக்கிராமத்தில் சீக்கியர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். இதேபோல் இஸ்லாமியர்களும் இந்துக்களும் குறைந்த அளவில் வசித்து வருகின்றனர். ஏற்கெனவே இங்கு சீக்கியர்கள் வழிபாட்டுக்காகக் குருத்வாரா உள்ளது. இதேபோல் இந்துக்களுக்காகச் சிவன் கோயில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது மசூதி ஒன்று கட்டப்படவுள்ளது. இதற்காக இந்துக்கள் நிலம் அளித்துள்ளதுடன், சீக்கியர்கள் பணம் அளித்து உதவிபுரிந்துள்ளனர். 

இதேபோல் கட்டுமான பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இருக்கும் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இச்சம்பவம் அமைந்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள அந்தக் கிராமத்தினர், "ஏற்கெனவே எங்கள் ஊரில் குருத்வாரா உள்ளது. இதேபோல் சிவன் கோயிலைக் கட்டி வருகிறோம். நீண்ட நாட்களாக மசூதி கட்ட வேண்டும் எனக் கனவு இருந்தது. தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எங்களை பொறுத்தவரை அனைத்து மதத்தினரும் சமம்தான். குழந்தை பருவம் முதல் ஒற்றுமையைப் பேணி வருகிறோம். மதநல்லிணக்கமே எங்கள் பெருமை. மூன்று வழிபாட்டுத் தளங்களையும் அமைப்பதன் மூலம் வழிபாட்டு உரிமையை நிலை நாட்டுவதுடன், வெறுப்பு உணர்வு ஏற்படாது. இதன்மூலம் பஞ்சாப்பும் பஞ்சாபியும் நாட்டு மக்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறோம்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!