காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி உயர்மட்டக் குழு ஆய்வு..! | Marxist party reviews at Kanchipuram orphanage

வெளியிடப்பட்ட நேரம்: 01:01 (01/03/2018)

கடைசி தொடர்பு:01:01 (01/03/2018)

காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் மார்க்ஸிஸ்ட் கட்சி உயர்மட்டக் குழு ஆய்வு..!

பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தில் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

முதியோர் இல்லம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் பாலேஸ்வரத்தில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் முதியோர் கருணை இல்லத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அந்த இல்லத்தில் உள்ளவர்களை அரசு அனுமதி பெற்ற பல்வேறு முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “பாலேஸ்வரம் பகுதியல் உள்ள முதியோர் இல்லத்திலிருந்து இதுவரை 186 பேர் மீட்கப்பட்டு, அரசு உதவிபெறும் வெவ்வேறு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த முதியோர் கருணை இல்லம் முழுமையான ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது குறித்த சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், வருவாய்த்துறை, சமூகநலத்துறை, மருத்துவக்குழுவின் முழுமையான ஆய்வறிக்கை கிடைத்தவுடன் ஒரு வாரத்திற்குள் காப்பகத்தின்மீது உரிய விசாரணை நடைபெறும்“ என அறிவித்தார்.

இதற்கிடையே, நேற்று காலை பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாநிலக் குழு உறுப்பினர் வா.பிரமிளா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின் பேசிய மத்தியக் குழு உறுப்பினர், “அனுமதி பெறாமலே இந்தக் காப்பகம் செயல்பட்டு வருகிறது. எஸ்.பி-யிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாக சொல்லி ஏமாற்றி வந்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும் அரசு அதிகாரிகள் இதில் அலட்சியமாக செயல்பட்டு வருவது தெரியவருகிறது. இதில் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆயர்கள் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை சந்தித்து மனு கொடுத்துள்ளார்கள். அதில், “அன்னை தெரசா வழியில் நாடுமுழுவதும் தொண்டு செய்து வருகிறோம். எங்கள் மீது வேண்டுமென்றே சிலர் தவறான தகவல்களை ஊடகங்களுக்கு அளித்து வருகிறார்கள். இதனால் எங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த கருணை இல்லம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close