ஜெயேந்திரரிடம் கடைசியாக ஆசீர்வாதம் வாங்கிய வி.ஐ.பிகள்..! | jeyandrar's last VIP visit

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (01/03/2018)

கடைசி தொடர்பு:07:40 (01/03/2018)

ஜெயேந்திரரிடம் கடைசியாக ஆசீர்வாதம் வாங்கிய வி.ஐ.பிகள்..!

ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் நேற்று காலை காலமானார். நேற்று மாலை 5.00 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜெயேந்திரரை சங்கர மடத்தில் சந்தித்து ஆசிபெற்றார். ஆனால் அதற்கு பிறகு சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற வி.ஐ.பி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

காஞ்சிபுரம் வந்த ஆளுநர் ஆய்வுகளை முடித்துவிட்டு காஞ்சிபுரம் விருந்தினர் மாளிகையில் தங்கினார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.00 மணிக்கு சங்கரமடம் சென்றார். அப்போது விஜயேந்திரர் அவரை வரவேற்று சங்கர மடம் உள்ளே அழைத்து சென்றார். உள்ளே சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஜெயேந்திரரிடம் ஆசிர்வாதம் வாங்கினார். அதன் பிறகு ஜெயேந்திரர் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

செங்கோட்டையன், ஜெயேந்திரர்

அதுபோல் நேற்றைக்கு முந்தைய நாள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் குதிரை வாகனத்தில் காமாட்சி அம்மன் ஊர்வலம் வருவதை கேள்விப்பட்ட அமைச்சர் அம்மனை தரிசிக்க காத்திருந்தார். சங்கரமடம் அருகே இரவு 9 மணிக்கு அம்மன் வீதிஉலா வரும்போது ஜெயேந்திரர் அம்மனை தரிசித்து தீபாராதனை செய்தார். அப்போது செங்கோட்டையன் அவரை சந்தித்து ஆசிபெற்றார். அதன் பிறகு ஜெயேந்திரர் யாரையும் சந்திக்கவில்லை என்கிறார்கள். இதுவே ஜெயேந்திரரின் கடைசி வி.ஐ.பி சந்திப்பாக இருந்தது.

ஜெயேந்திரர் மறைவிற்கு பிறகு மீண்டும் இன்று துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் வந்த செங்கோட்டையன் ஜெயேந்திரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அதுபோல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் நாளை காஞ்சிபுரம் வந்து இறுதி அஞ்சலி செய்ய உள்ளார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க