வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (01/03/2018)

கடைசி தொடர்பு:07:50 (01/03/2018)

பழங்களில் விலங்குகள் உருவங்களை செய்து அசத்திய வாண்டுகள்..!

சுற்றுச்சூழலையும், உடல்நலத்தையும் கெடுக்காத வகையில், வேதிப்பொருட்கள் இல்லாமல், இயற்கையாக வளர்ந்த காய்கறிகள், பழங்கள் மூலம் அப்படியே உட்கொண்டு, நெருப்பில் சமைக்காமல்,  நம் உணவுமுறையை சிறப்பான முறையில் மாற்றிக்கொள்ளலாம் என்பதை பிஞ்சு மனதில் விதைக்கும் வகையில் விருதுநகர் கே.பி.பி ஆரம்ப பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இயற்கை உணவை

விருதுநகர் கே.பி.பி ஆரம்ப பள்ளியில் தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு விஷயங்கள செய்து காட்டினார்கள். காய்கறிகள், பழங்கள் மூலம் ஓவியங்கள், உருவங்கள், விலங்குகளை செய்து அசத்தினார்கள்.

விருதுநகர்

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பச்சைக் காய்கறிகள், பழங்கள்,பயறுகள், முளை கட்டிய தானியங்களை கொண்டு நெருப்பிலாமல் சுவையான உணவு சமைத்து அங்கு வந்தவர்களுக்கு சாப்பிட கொடுத்து பாராட்டு பெற்றார்கள்.

இயற்கை உணவை

அவர்கள் செய்து வைத்து உணவுகளும் வந்திருந்தவர்களுக்கு வாயூற வைத்தது. ஜங் ஃபுட்டும், பாஸ்ட் ஃபுட்டும்  அதிகமாக விற்பனையாகும் காலத்தில், இயற்கையான உணவுகள் மீது மாணவர்களுக்கு சிறு வயதிலேயே  நாட்டம் ஏற்ப்படும் வகையில் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்தோம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறினார்கள். நல்ல முயற்ச்சி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க