ஜெயேந்திரர் அஞ்சலிக்கு சங்கரமடத்துக்கு வந்த பிரமுகர்களின் பட்டியல்!

சங்கரமடம் பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி-க்கள் காஞ்சிபுரத்தில் திரண்டு ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 

காஞ்சிபுரம் சங்கரமட மடாதிபதி ஜெயேந்திரர் மூச்சு திணறல் காரணமாக நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா, எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உள்ளிட்டோர் அங்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரடி ஆய்வு செய்தனர். ஜெயேந்திரர் மறைவைத் தொடர்ந்து சங்கரமடத்திற்கு பக்தர்கள் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். நீண்ட வரிசையில் நின்று ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முக்கியப் பிரமுகர்களும் சங்கர மடத்திற்கு குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

நேற்று காலையிலிருந்து பி.ஜே.பி-யின் முக்கியப் பிரமுகர்களான இல. கணேசன், தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா, டிடிவி தினகரன், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் திருநாவுக்கரசு, ஜி.கே. வாசன், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், இசைஞானி இளையராஜா, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் செங்கோட்டையன்,  அமைச்சர் கே.பி.முனுசாமி, மைலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜன், காஞ்சிபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் த.மோ. அன்பரசன், தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி. காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன், பங்காரு அடிகளாரின் மகன் கோ.ப. அன்பழகன் உள்ளிட்டவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த பட்டியல் இல்லாமல் இன்னும் பல முக்கியப் பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் இன்று காலையில் நடக்கவிருக்கும் ஜெயேந்திரர் இறுதிச் சடங்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!