வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (01/03/2018)

கடைசி தொடர்பு:12:40 (01/03/2018)

ஜெயேந்திரர் அடக்கம் செய்யும் முறை இதுதான்! - தீவிர ஏற்பாடுகளில் சங்கரமடம்

காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி ஜெயேந்திரர் உடல் சங்கரமடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஜெயேந்திரர், சங்கர மடம்

இறுதிச் சடங்கின் போது ஜெயேந்திரர் மோட்சம் அடைவதற்காக  முக்திநாத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாளகிராமத்தை அவர் தலைமீது வைத்து அபிஷேகம் செய்வார்கள். மடத்தின் சார்பாக மாணவர்களும் ஆசிரியர்களும் அனைத்து மந்திரங்களும், வேதங்களையும் ஓதுவார்கள். பிறகு சங்கரமடத்தில் அமைந்துள்ள மகா பெரியவா பிருந்தாவனத்துக்கு இடப் புறத்தில் அடக்கம் செய்ய இருக்கிறார்கள்.  காலை எட்டு மணியிலிருந்தே இதற்கான நிகழ்வுகள் தொடரும். இந்த நிகழ்வில், மோட்ச தீபம், நெய் தீபம் ஆகியவை ஏற்றி வழிபாடு செய்யப்படும்.

ஜெயேந்திரர் அடக்கம்

ஏழு அடி சதுர பரப்பளவில், ஏழு அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சுற்றிலும் செங்கற்களால் சுவர் எழுப்பி இருக்கிறார்கள். பெரிய மூங்கில் கூடை ஒன்றையும், சந்தன நாற்காலி ஒன்றையும் இரவோடு இரவாக தயார் செய்து இருக்கிறார்கள்.  பெரிய மூங்கில் கூடையில் சந்தன நாற்காலியில் ஜெயேந்திரரை அமர்ந்த நிலையில் வைப்பார்கள். பின்பு அதில் வசம்பு, உப்பு, சந்தனக்கட்டை ஆகியவற்றை கொண்டு உடலை மறைப்பார்கள். எஞ்சியுள்ள இடத்தில் மணலைக் கொட்டி மூடுவார்கள். முழுமையாக உடல் மறைந்ததும் சிமென்ட் கலவையால் பூசிவிடுவார்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க