வெளியிடப்பட்ட நேரம்: 09:02 (01/03/2018)

கடைசி தொடர்பு:11:17 (01/03/2018)

’களம் பல காண வேண்டும்!’ -  மு.க.ஸ்டாலினுக்கு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து!

மு.க.ஸ்டாலின்

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் பெரியார், அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  அவருடன் தி.மு.க. முதன்மைச்செயலாளர்   துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் இருந்தனர். 

மு.க.ஸ்டாலின்
 

மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் ‘தி.மு.க. எனும் ஆலமரத்தின் பலமான விழுதாக ஸ்டாலின் உள்ளார் மத்திய, மாநில அரசிடமிருந்து தமிழக உரிமைகளை மீட்டெடுக்கும் பொறுப்பு ஸ்டாலினுடையது. களம் பல காண வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ட்விட்டரில் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க