சங்கர மடத்தில் ஜெயேந்திரர் இறுதிச் சடங்கு! - ஆளுநர், மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரர் உடலுக்கு வேதமந்திரங்கள் ஓத இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஜெயேந்திரர்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அரசியல் தலைவர்கள், ஆன்மிக தலைவர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பல்வேறு தரப்பினர் நேற்றிலிருந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 8 மணியிலிருந்து இறுதிச் சடங்குகள் செய்யும் பணி தொடங்கியது.

ஜெயேந்திரர்
 

இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஜாபர் ஷேரிப், மத்திய அமைச்சர் சதானந்தா கௌடா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் வந்திருக்கிறார்கள்.

ஜெயேந்திரர்
 

காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், குமரகோட்டம் முருகன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலிருந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அபிஷேகப் பொருள்கள் சங்கர மடத்திற்கு கொண்டு வரப்பட்டது. புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதி சடங்குகளைச் செய்துவருகிறார்கள். அதைத் தொடர்ந்து அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பொது மக்கள் பின்பு மண்டபத்திலிருந்து பிருந்தாவனத்தில் செய்யப்பட்டுள்ள குழியில் மூங்கில் கூடையில் வைத்து பூஜைகள் செய்யும் பணி தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் அடக்கம் செய்யும் பணி தொடங்கிவிடும் என்பதால் ஜெயேந்திரருக்காக பக்தர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்துவருகிறார்கள். விஐபிக்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுள்ளதால் சங்கரமடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!