வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (01/03/2018)

கடைசி தொடர்பு:12:35 (01/03/2018)

33 வருட தோழிக்கு ஏன் நல்ல சிகிச்சை அளிக்கவில்லை? சசிகலாவைச் சாடும் அமைச்சர் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

தனது கணவர் நடராஜனுக்கு உடம்பு சரியில்லைன்னு உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய வைக்கிறாங்க. ஆனால், 33 வருஷம் உடன் இருந்த தோழின்னு சொல்ற ஜெயலலிதாவுக்கு ஏன் நல்ல சிகிச்சை கொடுக்கவில்லை?" என்று  போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

கரூர் உழவர் சந்தை அருகே கரூர் மாவட்ட கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "அம்மாவுக்கு 33 வருஷமா எல்லாமுமாக இருந்தேன் என்று சொல்கிறார் ஒரு பெண்மணி. ஆனால், அம்மா உயிருடன் இருந்தபோது, சுதந்திர தினத்தில் கொடியேற்றினார். ஆனால், மூன்று முறை உட்கார்ந்தார். அந்த அளவுக்கு உடல் நலமில்லாமல் இருந்தார். ஆனால், அப்போது தோழி என்பவர் அவரை மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கவில்லை. ஆனால், இப்போது 'ஜெயலலிதாவை அப்போலோவில் சேர்த்து வைத்தியம் பார்த்தோம்' என்கிறார்கள்.

விஜயபாஸ்கர் கூட்டம்

காலம் கடந்து ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்ததோடு, இப்போதைய முதலமைச்சர் எடப்பாடியையோ, அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையோ ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கவில்லை. ஆனால், ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலுக்கு ஜெயலலிதாவை ஒளிஞ்சு இருந்து எடுத்த வீடியோவை வெளியிட்டு, கேவலமாக ஓட்டு அரசியல் செய்தார்கள். ஜெயலலிதாவுக்கு ஏன் நல்ல சிகிச்சை செய்யவில்லை. தனது கணவர் நடராஜனுக்கு உடம்பு சரியில்லை என்றதும், உடனே மருத்துவமனையில் சேர்க்க வைத்து, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வைத்து நலமாக்கி இருக்கிறீர்கள். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சியே. ஆனால், 33 வருட தோழின்னு அடிக்கடி சொன்ன ஜெயலலிதாவை ஏன் காலத்தோடு சேர்த்து, அவருக்கு நல்ல சிகிச்சை கொடுக்கவில்லை?. அவருக்கு காட்டிய அக்கறையை ஜெயலலிதாவுக்கு ஏன் காட்டவில்லை'' என்று ஆவேசப்பட்டார்.