`ஆட்டுக்குட்டிகள்... பண மாலை... ட்விட்டர் ட்ரெண்ட்!' - ஸ்டாலினை நெகிழவைத்த தொண்டர்கள் | M.K.Stalin birthday hash tag trending in twitter

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (01/03/2018)

கடைசி தொடர்பு:13:33 (01/03/2018)

`ஆட்டுக்குட்டிகள்... பண மாலை... ட்விட்டர் ட்ரெண்ட்!' - ஸ்டாலினை நெகிழவைத்த தொண்டர்கள்

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த், மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்

 

தி.மு.க செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் 65 வது பிறந்தநாள் இன்று. தனது பிறந்த நாளையொட்டி, சென்னையில் பெரியார், அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் இருந்தனர். பின்னர் தொண்டர்கள் சூழ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார்.

ஸ்டாலின்
 

மு.க.ஸ்டாலினுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தி.மு.க தொண்டர்கள் காலை முதலே அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு பரிசுகளுடன் குவியத் தொடங்கிவிட்டனர். 

 

 

 

ஒரு தொண்டர் 66,000 ரூபாய் காசோலையுடன் உற்சாகமாகக் காத்துக்கொண்டிருந்தார். மற்றொரு தொண்டர் ஆடு மற்றும் ஆட்டுக்குட்டிகளைப் பரிசளிக்கவும் சிலர் மிகப்பெரிய பண மாலையைத் தூக்கிக்கொண்டு வந்தும் அங்கிருந்தவர்களைத் திகைப்பில் ஆழ்த்தினர். 

 

ஸ்டாலின்
 

நடிகர் ரஜினிகாந்த் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்

மேலும், தி.மு.க தொண்டர்கள் #HBDMKStalin என்ற ஹேஷ்டாக்கின்கீழ் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குவியும் வாழ்த்து செய்திகளால்  #HBDMKStalin என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க