வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (01/03/2018)

கடைசி தொடர்பு:13:15 (01/03/2018)

கோபாலபுரம் இளைஞர் குழு முதல் தி.மு.க. செயல் தலைவர் வரை... ஸ்டாலின் கடந்துவந்த பாதை! #Stalin65

1953ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்த வாரத்தில் தான் திமுக தலைவர் கருணாநிதிக்கு மகன் பிறந்திருக்கிறார். அதனால் அவருக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியுள்ளார். இல்லையென்றால் கருணாநிதி தன் மகனுக்கு வைக்க நினைத்த பெயர் அய்யாத்துரை. அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாத்துரையையும் என குறிக்கும் விதமாக பெயரை தேர்ந்தெடுத்துள்ளார்.

14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் குழு என தனது அரசியல் வாழ்க்கையை துவங்கிய ஸ்டாலின், தனது 19வது வயதில் தி.மு.க-வுக்காக சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய துவங்கினார். எமர்ஜென்ஸியில் கைது, திமுக இளைஞர் அணி மாநில செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர் என தொடர்ந்து அரசியலில் முக்கிய பதவிகளை வகித்தார்.

இரட்டை பதவிக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டுவர மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாக பணியை தொடர்ந்தார். 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்முறையாக துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். 

2016ம் ஆண்டு தேர்தலுக்காக ''நமக்கு நாமே'' என்று தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். 20.09.2015 முதல் 12.02.2016 வரை தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் உள்ள 212 சட்டமன்ற தொகுதிகளில் 11000 கி.மீ பயணம் செய்தார். வர்த்தகர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், பெண்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் என 150 கூட்டங்களில் பங்கேற்றார்.

2016 தேர்தலில் தோல்வியடந்தாலும், பலமான எதிர்கட்சியாக சட்டமன்றத்துக்குள் திமுக நுழைந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். 

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலின்


டிரெண்டிங் @ விகடன்