`இனிமேல் இந்தக் கேள்வியைக் கேட்காதீர்கள்' - செய்தியாளர்களிடம் பொங்கிய சரத்குமார்

''நான்  ஏன் கமலுடன்  கூட்டணி  வைக்க வேண்டும், அவா்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும். அவருக்கு முன்பே அரசியலுக்கு வந்தவன் நான்'' என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் சரத்குமார்.

சரத்குமார்

அரியலூா் மாவட்டம், உடையார்பாளையத்தில் ஜமீனுக்கு சொந்தான பெரிய கோயிலில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் 'பாம்பன்' படப்பிடிப்பு நடைபெறுகிறது. அப்போது செய்தியாளா்களைச்  சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார், இன்றைய அரசியல் அரசியலாக உள்ளது. தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளிக்கும் கப்பலை சீரமைத்துக் கொண்டு சிறப்பாகச் செல்கிறார்கள். அதற்கு நான் முதலில் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். நடிகா் சங்கத்தைப் பற்றி எனக்குத் தெரியாது. அதில் நான் உறுப்பினராகக்கூட இல்லை. ஓகி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு குறைந்த அளவு நிதி கொடுத்துள்ளது. பாதிப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாநில அரசு, மத்திய அரசுக்கு நிர்பந்தம் தர வேண்டும். நடிகா்கள் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு நல்லதுதான். மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் சந்தோசம் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், எப்ப வர வேண்டும் என்று சூழல் உள்ளது.

சரத்குமார்

நான் 21 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். ஓய்வு பெற்று ஓய்ந்த பிறகு அரசியலுக்கு வரவில்லை. சூர்யவம்சம் போன்ற சூப்பர் ஹிட் படங்களைத் தந்தபோதும், சூப்பா் ஸ்டாராக இருந்த காலகட்டத்தில் அரசியலுக்கு வந்தேன். இப்போது எல்லோரும் கேட்கிறார்கள் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்று. நான்  ஏன் கமலுடன்  கூட்டணி  வைக்க வேண்டும். அவா்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும். அவருக்கு முன்பே அரசியலுக்கு வந்தவன் நான். மக்களின் மனநிலைகளை நன்கு அறிந்தவன் நான். அவர்தான் என்னோடு கூட்டணி வைக்க வேண்டும். இனிமேல் கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்காதீர்கள். இதைக் கமலிடம் கேளுங்கள்'' என்றார். மேலும், ''ஒருசிலர் ஒய்வு பெறும் நேரத்திற்குள் அரசியலுக்குள் வந்திருக்கிறார் என்று நேரடியாகக் கமல்ஹாசனை விமர்சனம் செய்தனர். நேரம் வரும் காலம் வரும் நானும் ஆட்சிப்பொறுப்பில் வந்து அமருவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!