காஞ்சி சங்கராச்சாரியாருக்காக `துவா' செய்த இஸ்லாமியர்கள்!

காஞ்சி காமகோடிபீடாதிபதி ஜெயேந்திரர் மறைந்ததையடுத்து, ஆன்மிகவாதிகள், அரசியல்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், காஞ்சியைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்களும் ஜெயேந்திரருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் உள்ள பெரிய மசூதியான ஜும்மா மசூதியிலிருந்து புறப்பட்ட இஸ்லாமிய மக்கள் காஞ்சி மடத்துக்குள் சென்று அவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவருக்காகத் `துவா' என்னும் பிரார்த்தனையும் செய்தனர். பின்னர், இளைய மடாதிபதி விஜேயேந்திரரையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.  

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு துவா செய்யும் இஸ்லாமியர்கள்

இது குறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் ஜும்மா மசூதி செயலாளர் ஜே.முகமது கூறுகையில், ''மகா பெரியவர் காலத்திலிருந்தே, நாங்கள் காஞ்சி மடத்துடன் நெருங்கிய நட்பு கொண்டிருக்கிறோம். காஞ்சிப் பகுதியில் சமய நல்லிணக்கம் நிலவ காஞ்சி மடம் ஒரு முக்கியக் காரணம். இந்தப் பகுதியில் மசூதி கட்டக் கூடாது என்று எதிர்ப்பு வந்தது. அப்போது, மகா பெரியவர், 'மசூதி கடவுள் உலவும் பகுதி. அதைக் கட்டக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை’ என்று கூறி மசூதி எழுப்ப உதவினார்'' என்று தெரிவித்துள்ளார். 

 சங்கராச்சாரியாருக்கு இஸ்லாமிய மக்கள், இறுதி மரியாதை செலுத்தியது காஞ்சி மக்களை நெகிழச் செய்துள்ளது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!