மெரினாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - என்ன செய்யப்போகிறது காவல்துறை? #VikatanInfographics | Increasing deaths in marina Will Police take necessary Action ?

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (01/03/2018)

கடைசி தொடர்பு:14:52 (20/04/2018)

மெரினாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் - என்ன செய்யப்போகிறது காவல்துறை? #VikatanInfographics

உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் கடலுக்குள் குளிக்க சென்று உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 26ம் தேதி திங்களன்று குளித்துக் கொண்டிருந்த 15 வயது பள்ளி மாணவன் கார்த்திக் ராட்சத அலையில் சிக்கிக் உயிரிழந்தார். அதேபோல், கடந்த 18 ஆம் தேதி பிரஜித் என்ற ஹாக்கி வீரர் அலையில் சிக்கி உயிரிழந்தார். எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை உள்ள 25 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் 100 க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி உயிரிழக்கும் சோகம் தொடர்ந்து வருகிறது.

                                       மெரினா

சென்னை பெருநகர காவல்துறையும் கடலில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறி வருகிறது. இருந்தும் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. 1965 ஆம் ஆண்டுகளில் கடற்கரைகளில் ஓரத்தில் பாறைகளைக் கொண்டு கரையோரத்தை பாதுகாத்தனர். தற்போது இயற்கையாக இருந்த அனைத்தும்  இயந்திரமயமாக்கப்பட்டு அழிந்து விட்டது. தற்போது அங்கு பாறைகள் ஏதுமில்லாமல் மக்கள் உயிரை வாங்கும் அபாய பகுதிகளாக மாறிவருகிறது. 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 50,000 த்துக்கும் அதிகமான மக்கள் மெரினா கடற்கரைக்குச் செல்கின்றனர். ஆனால் அவர்களின் பாதுகாப்பிற்காக 100 போலிசார் கூட இருப்பதில்லை. பொதுமக்கள் கடலில் குளிக்கும்போது அவர்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. 

                                     மெரினா

கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றதும், அவர்களின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் கடலில் இறங்குகின்றனர். நன்கு நீச்சல் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் மெரினா மற்றும் பெசன்ட் நகர் பீச்சில் 5 கடற்கரை  வாகனங்களுடன் ரோந்து பணியில் இருக்கின்றனர். ஆனால், அந்த வாகனங்களை பண்டிகைக் காலங்களில் பயன்படுத்துவதில்லை என்று காவலர்கள் தெரிவிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டு கடலுக்குள் செல்லும் மக்களை தடுக்க நாய்களை பயன்படுத்தி தடுத்து வந்தனர். ஆனால் தற்போது அதனை நடைமுறைப்படுத்துவதில் சாத்தியமில்லை என்றும் கூறுகின்றனர்.

காணும் பொங்கலின் போது, அதிக மக்கள் கூடுவதால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க கல்லுக்குட்டை முதல் கலங்கரை விளக்கம் வரை சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுவதாகவும், மெரினாவில் குளிப்பதற்கு தடை விதிப்பதாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில்  அண்ணா சதுக்கம்,மெரினா,மற்றும் வெளிப்புற கரையோர எஸ்டேட் பகுதிகள் ஆகிய இடங்களில் பலர் கடலில் முழ்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து சென்னை காவல்துறை தகவல்களை வெளியிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்