திருமணத்துக்கு பெண் பார்த்துவிட்டு வந்த நண்பர்களுக்கு நடந்த சோகம்!

ACCIDENT

இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர்மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தால், இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து ஏற்படுத்திய லாரியும் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகே உள்ள  சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். நாகப்ப உடையான்பட்டியைச் சேர்ந்த தன் நண்பர் சரவணனின் மகனுக்கு குடமுருடியில் பெண் பார்த்துவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். வண்டியை சரவணன் ஓட்டினார். வல்லம் அருகே உள்ள முதலைமுத்துவாரி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி இவர்கள்மீது பலமாக மோதியது. இதில், இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். 

ACCIDENT
 

 விபத்தைக் கண்ட டிரைவர், லாரியிலிருந்து குதித்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். லாரியின் டீசல் டேங்க் உடைந்து கசிவு ஏற்பட்டதால், லாரி தீப்பிடித்தி எரிந்து முற்றிலும் சேதமானது. இந்த விபத்துகுறித்து காவல்துறையினர் விசாரித்துவரும்நிலையில், விபத்தில் இருவர் பலியானதால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியதோடு, நடு ரோட்டில் எரிந்த லாரியாலும் பரபரப்பு ஏற்பட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!