“ஸ்டாலின் பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாம்!”- எம்.எல்.ஏ-வின் நல்ல முயற்சி

தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் வண்டலூர் உயிரியல் பூங்கா விலங்குகளை தத்தெடுத்துள்ளார்.

ஸ்டாலின், வண்டலூர் உயிரியல் பூங்கா

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 66-வது பிறந்தநாள் விழாவை தி.மு.கவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடினார்கள். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சார்பில் த.மோ.அன்பரசன் தலைமையில் பல்வேறு இடங்களில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி  மதுசூதனன்  தத்தெடுத்துள்ளார். வீரா என்ற சிங்கம், விஜய் என்ற புலி ஆகியவற்றிற்கு 100 நாட்களுக்கான உணவுச் செலவு மற்றும் யானை ஒன்றிற்கான ஒரு வருட செலவினை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கான மொத்த செலவு ரூ.4,82,682  (நான்கு லட்சத்து எண்பத்திரெண்டாயிரத்து அறநூற்று எண்பத்தி இரண்டு ரூபாய்)-க்கான வரைவோலையை காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும், ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான த.மோ.அன்பரசன் வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக்குநரிடம் வழங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!