வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (02/03/2018)

கடைசி தொடர்பு:15:25 (02/03/2018)

இறுதி ஊர்வலத்தில் குருநாதரின் உடலைச் சுமந்துசென்ற வைகோ!

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் இறுதிச் சடங்கில் வைகோ கலந்துகொண்டார்.

வைகோ

நெல்லை மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தில் பிறந்த அவர், வழக்கறிஞர் தொழில் செய்தார். தனது திறமையின் காரணமாக முன்னேறிய அவர் 1974-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். பின்னர், 1988-ம் வருடம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு 1994-ல் ஓய்வு பெற்றார். தான் பிறந்த மாவட்டத்தின்மீது நீங்காத அன்பு கொண்டிருந்த அவர், அப்பகுதி மக்கள் முன்னேற்றத்துக்காக உழைத்தவர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் சென்னையில் திடீர் மரணம் அடைந்தார்

தி.மு.க தலைவர் கருணாநிதி, வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களிடம் மிக நெருக்கம் காட்டி வந்தார் ரத்தினவேல் பாண்டியன். அதன் காரணமாக, அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்டதுடன் அவர் உடலைத் தூக்கிச் சென்று தனது நட்பை வெளிப்படுத்தினார். இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக, ரத்தினவேல் பாண்டியனிடம் வைகோ ஜூனியர் வக்கீலாகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க