“ரூ.10,000 கோடி சொத்து சேர்த்தது எப்படி?” - தினகரனிடம் கேட்கும் அமைச்சர் ஜெயக்குமார் | Rs 10,000 Crore Property; Minister Jayakumar Slams TTV Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (02/03/2018)

கடைசி தொடர்பு:18:26 (02/03/2018)

“ரூ.10,000 கோடி சொத்து சேர்த்தது எப்படி?” - தினகரனிடம் கேட்கும் அமைச்சர் ஜெயக்குமார்

ரூ.10,000 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது எப்படி?' என்று தினகரனை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார், அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார்

 

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபின், தினகரன் தனியாகச் செயல்பட்டுவருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தினகரன், தனது அணியை வலுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

தினகரன் அணியினருக்கும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் மோதல்கள் நிகழ்வதும், வார்த்தைப் போர் நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துவருகிறார்கள்.  

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வெற்றிவேலையும் தங்க தமிழ்ச்செல்வனையும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார், டி.டி.வி தினகரன். அவர்கள் இருவரும் தலைமைச் செயலகத்துக்கு வந்து, அரசுமீது புழுதிவாரித் தூற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. டி.டி.வி. தினகரனுக்கு ரூ.10 ஆயிரம் கோடி சொத்து சேர்ந்தது எப்படி?” என்று அதிரடியாகக் கேட்டார்.  

மேலும், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம்கொடுக்கப்பட்டுவருகிறது” என்று தெரிவித்தார்.