'ஒரு பக்கம் வேலை; மறுபக்கச் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி ' | In tiruvannamalai 3 people dead by building collapse

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (02/03/2018)

கடைசி தொடர்பு:19:41 (02/03/2018)

'ஒரு பக்கம் வேலை; மறுபக்கச் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி '

திருவண்ணாமலையில் பழைய கட்டடம் இடிக்கும் பணியின்போது, ஒரு பக்க சுவர் முழுமையாக இடிந்து, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்மீது விழுந்தது. இதில், இடர்பாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.

உயிரிழப்பு

திருவண்ணாமலை திருவூடல் தெருவில், சீனுவாசன் என்பவர் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிதாக மருத்துவமனை அமைப்பதற்கு, பழைய  கட்டடத்தை ஜே.சி.பி. இயந்திரம்மூலம் இடித்துவந்துள்ளார். இன்று, வழக்கம்போல  5 பேர் பணியில் ஈடுபட்டுவந்துள்ளனர். அப்போது, அதன் பக்கத்தில் உள்ள 75 ஆண்டுகள் பழைமையான தில்லூளார் மடத்தின் ஒருபக்க சுவர் முழுமையாக இடிந்து, வேலை செய்துகொண்டிருந்தவர்கள்மீது விழுந்துள்ளது. இதில், இடர்பாடுகளில் சிக்கியவர்களின் அழுகுரல்கள் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல்கொடுத்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, இடர்ப்பாடுகளில் சிக்கிய 5 பேரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் ரமேஷ், அலமேலு, லட்சுமணன். ஆகிய மூன்று பேர் மருத்துவமனைக்குப் போகும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர். இச்சம்பவம்குறித்து திருவண்ணாமலை டவுன் போலீஸ் மற்றும் மாவட்ட எஸ்.பி., பொன்னி, சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க