`இன்னொரு வாசிம் அக்ரம் கிடைத்துவிட்டார்' - சிறுவன் குறித்து நெகிழும் பாகிஸ்தானியர்கள்!

வாசிம் அக்ரம் போலவே பந்துவீசிய சிறுவனுக்கு, ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. 

வாசிம் அக்ரம்

தனது இன்ஸ்சுவிங் மற்றும் யார்க்கர் பந்துவீச்சால் 1990-களில் பேட்ஸ்மேனை கலங்கடித்தவர், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்  வாசிம் அக்ரம். இவரும், வாக்கர் யூனிஸும் சேர்ந்துகொண்டு, ஒருகாலத்தில் எதிரணியைக் கலங்கடித்தனர். இவர்களின் காலத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மற்ற அணிகளுக்கு கடும் சவாலாக இருந்தது. இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு பைஜான் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாசிமை இமிடேட் செய்யும் வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பௌலிங்க் செய்துவருகிறான். 

ஒரேயொரு  ஸ்டம்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு, வீட்டில் விளையாடும் அச்சிறுவன், தனது இன்ஸ்சுவிங் பௌலிங்கால் ஸ்டம்ப்பை சாய்த்துள்ளார். சுமார் 1 நிமிடம் மட்டும் ஓடும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள அந்த நபர், கூடவே அக்ரம், அஃப்ரிடி, சோயிப் அக்தர் ஆகியோரை டேக் செய்துள்ளார். வெளியான சில மணி நேரத்தில் வைரலாகப் பரவ, அனைவரும் அடுத்து ஒரு வாசிம் கிடைத்துவிட்டார் என ட்ரோல் செய்துள்ளனர். இதற்கிடையே, இந்த வீடியோவைப் பார்த்த அக்ரமோ, "எங்கே இருக்கிறான் இந்தப் பையன்? நம் நாட்டில் உள்ள இளம் நரம்புகளில் புதிய திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவர்களைக் கண்டுபிடித்துக் கொடுக்கும் சிறந்த மேடை இல்லை. இதற்காக ஏதாவது செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!