வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (03/03/2018)

கடைசி தொடர்பு:05:00 (03/03/2018)

என் மனைவியின் சிறந்த படம் இதுதான்..! நெகிழ்ந்த விராட் கோலி

சமீபத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்த பரி எனும் பாலிவுட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை குறித்து ட்வீட் போட்டு தன் நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அந்த ட்வீட்டில் ' பரி திரைப்படத்தை நேற்று இரவு பார்த்தேன், என் மனைவியின் சிறந்த படம் இதுவாகதான் இருக்கும். வெகுகாலம் கழித்து நான் பார்த்த சிறந்த திரைப்படம். படம் கொஞ்சம் பயமாக இருந்தாலும், அனுஷ்காவை நினைத்து பெருமைபடுகிறேன்' என்று கூறியுள்ளார். 

அனுஷ்கா ஷர்மா தயாரித்து நடிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. புதுமுக இயக்குனர் எடுத்துள்ள இத்திரைப்படம் அனுஷ்காவின் முதல் ஹாரர் திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பரி படத்தை பற்றிய விராட்டின் நெகிழ்ச்சியான ட்வீட் க்ரிக்கெட் ரசிகர்களை படம் பார்க்க வைத்துவிடும்போல. பரி படத்துக்கு வாழ்த்துகள் அனுஷ்கா.