தமிழகம் அனைத்து துறைகளிலும் ஊழலில் சிறந்து விளங்குகிறது. - இல. கணேசன் 

மம்தா பானர்ஜி, பிணராயி விஜயன் ஆட்சி கூட சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர் பிரதமர் மோடி. அந்த வகையில் தமிழகஅரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது தமிழக மக்களுக்கு நல்லது என்று பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

இல.கணேசன் எம்.பி.
 

செய்தியாளர்களிடம் பேசும்போது, ''தீவிரவாதம், பயங்கரவாதம் என்பது மதம் பார்ப்பதில்லை. எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்தை மதிப்பவர்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் கொடுத்த கால கெடுவுக்குள் வாரியம் அமைக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. தமிழகம் அனைத்து துறைகளிலும் ஊழலில் சிறந்து விளங்குகிறது.

இனியாவது ஊழலற்ற ஆட்சியை நடத்த முன் வரவேண்டும். அப்போதுதான்  மக்கள் அரசை மதிப்பார்கள். மம்தா பானர்ஜி, பிரணாய் விஜயன் தலைமையிலான ஆட்சியைக் கூட சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர் பிரதமர் மோடி. அந்த வகையில் தமிழக அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது தமிழக மக்களுக்கு நல்லது. தமிழகத்தில் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுபவோர் காவல்துறைக்கு தெரியாமல் இருக்காது. அவர்கள் மீது  சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால் தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!