வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (03/03/2018)

கடைசி தொடர்பு:16:56 (03/03/2018)

``உங்கள் பெற்றோரை நேசியுங்கள்!'' - ஸ்ரீதேவி மகள் ஜான்வி உருக்கம்

ல வருடங்கள் ஜொலித்த நட்சத்திரம் நடிகை ஶ்ரீதேவி மறைந்து ஒரு வாரம் ஆகப்போகிறது. 'என் மனைவி இல்லாத என் குடும்பத்தை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை' என்று போனிகபூர் சில நாள்களுக்கு முன்பு கண்ணீரும் காதலுமாக கசிந்து உருகியிருந்தார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஶ்ரீதேவியின் முதல் மகளும் நடிகையுமான ஜான்விக்கு பிறந்த நாள் வரப்போகிறது. 21 வயதை அன்று தொடப்போகிற ஜான்விக்கு, தன் செல்ல அம்மா இல்லாத முதல் பிறந்த நாளாக வரும் புதன்கிழமை இருக்கப்போகிறது. இந்த நிலையில் ஜான்வி, சில மணி நேரங்களுக்கு முன்பு, தன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

ஶ்ரீதேவி

``இதோ வரப்போகிற என் பிறந்த நாளையொட்டி, நான் உங்கள் எல்லோரிடமும் கேட்பது ஒன்றுதான். உங்கள் பெற்றோரை நேசியுங்கள் என்பதுதான் அது. அந்த அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். பெற்றோர்கள்தானே நம்மை உருவாக்கியவர்கள். என் அம்மாவை அன்புடன் நினைவுகூறுங்கள். அவரது ஆன்மாவுக்கு அமைதி கிடைக்க நீங்கள் எல்லோரும் வேண்டிக்கொள்ளுங்கள். என் அம்மா, என் அப்பாவின்மீது வைத்திருந்த காதல் இறவாத தன்மை கொண்டது. இந்த உலகத்தில் அவர்களது காதலைவிட பெரிதானது எதுவும் இல்லை. அந்த உணர்வுக்கு யாராவது களங்கம் விளைவிக்க முயன்றால், அது எங்கள் மனதைக் காயப்படுத்தும். நானும் என் தங்கையும் அம்மாவை இழந்திருக்கிறோம். என் அப்பாவோ தன் அன்பையே இழந்திருக்கிறார். 

ஜான்வி

என் அம்மாவுக்கு பொறாமைப்படத் தெரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் அன்பு செலுத்துவது மட்டும்தான். அவர் உங்களுக்கு நடிகை, எங்களுக்கு அம்மா, எங்கள் அப்பாவுக்கு மனைவி என்பதையெல்லாம் தாண்டி மேலானவர். என் அம்மா கண்ணியமிக்கவர், குற்றமற்றவர்... அவரை இழந்த இந்த வெகு சில நாள்களில் எங்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் தந்து கொண்டிருக்கிற உங்கள் எல்லாருக்கும் நன்றி'' என்று தன் கண்ணீர்த்துளிகளை எழுத்துகளாக வடித்திருக்கிறார் ஜான்வி!

அப்பா

காலம் ஜான்வியின் காயங்களை ஆற்றும் என்ற நம்பிக்கையில் அவருடைய பிறந்தநாளுக்கு நாமும் வாழ்த்துகளை சொல்வோம்!