`ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் வடமாநிலக் கொள்ளையன்' - குழந்தையை மீட்ட தாய் அதிர்ச்சி தகவல்!

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் காவேரி தெருவைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

கொள்ளையன்

கடந்த வியாழக்கிழமை அன்று காலை 9 மணியளவில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நிப்பான் மேஸ் என்பவர், அனிதா வீட்டின் கேட்டை மூடிக்கொண்டு ஒரு குழந்தைக்கு வீட்டினுள் சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தார். ஒரு வயது குழந்தையான சுபாஷினி வீட்டின் வராண்டாவில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது குழந்தை அலறி அழும் சத்தம் கேட்டது. உடனே வீட்டுக்குள் இருந்த அனிதா வெளியே ஓடி வந்து பார்த்தபோது யாரோ ஒருவர் தன் குழந்தையைத் தூக்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டில் வைத்திருந்த கம்பை எடுத்து அடிக்க பாய்ந்த உடன் அந்த நபர் குழந்தையை விட்டுவிட்டு வேகமாகப் போய்விட்டார். அனிதா பக்கத்து வீட்டுக்காரரிடம் சென்று விவரத்தைச் சொன்னபோது அந்தப் பகுதி மக்கள் அந்த நபரை பிடித்து மணவாளநகர் போலீஸிடம் ஒப்படைத்தனர். மணவாளநகர் போலீஸார் பிடிபட்ட  நபரிடம் நடத்திய விசாரணையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் நிப்பான் மேஸ் என்றும் தெரியவந்தது. அவர்மீது திருட முயல்வது (இந்திய தண்டனைச்சட்டம் 511), வீடு புகுந்து திருடுதல் (ஐபிசி 454) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய குழந்தையின் அம்மா அனிதா, "போலீஸ்காரர்கள் அவன்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவர் பல மொழிகளும் பேசுகிறார். எனவே அவரிடம் தீவிர விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். குழந்தைகளைத் திருடவேண்டும் என்ற நோக்கத்தில்தான் காலை 8 மணி முதல் எங்க தெருவிலும் பக்கத்து தெருவிலும் பல முறை ஆளில்லாத வீடுகளாய் பார்த்து நோட்டமிட்டுச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் எங்கள் வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டு சிசிடிவி-யில் அந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளது. ஆனால், போலீஸார் நடந்த சம்பவங்களைப் பத்திரிகையாளர்களிடம் சொல்லாமல் மறைக்கின்றனர்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!