வீட்டில் தனியாக இருந்த கல்லுாரி மாணவிக்கு செக்யூரிட்டியால் நேர்ந்த கொடூரம்!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த கல்லுாரி மாணவியைத் தனியார் நிறுவன காவலாளி பாலியல் கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பலாத்காரம்

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தன் தாய் ஜானகியுடன் வசித்து வருபவர் காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 23 வயதாகும் இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரின் தந்தை வெளியூரில் வங்கி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அவரின் தாய் வெளியில் சென்றுவிடவே, காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய ஜானகி, கதவைத் தட்டியுள்ளார். ஆனால், வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.

ஆனால், வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜானகி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே, அவர்களது உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் மதுபோதையில் வீட்டிலிருந்து வெளியே தப்பிச் செல்ல முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து அடையாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது காயத்ரி அலங்கோலமான நிலையில் தலையில் காயமடைந்த நிலையில் இருந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.

இதையடுத்து நடந்த போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் நிர்பவ் குமார் (வயது 27) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அடையாறிலுள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதேபோல் அவர் மது போதையில் இருந்தபோது காயத்ரி வீட்டில் புகுந்து திருட முயன்றுள்ளார். அதைக் காயத்ரி தடுக்க முயலவே, பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் காயத்ரி அளித்த புகாரின் பேரில் நிர்பவ்குமாரைக் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!