Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

மாற்றுசக்தி அந்தஸ்தை இழந்துவிட்டது தி.மு.க., - தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. வலுவான எதிர்க்கட்சியாக இருந்தும் தி.மு.க.வால் செயல்பட முடியவில்லை. தமிழகத்தின் மாற்றுசக்தியாக தி.மு.க ஒரு போதும் செயல்பட முடியாது. மாற்றுசக்தி அந்தஸ்தை இழந்துவிட்டது தி.மு.க" என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்த்தாமரை யாத்திரையாக திருச்செந்தூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'தமிழகம் முழுவதும் தமிழ்த்தாமரை யாத்திரை" மேற்கொண்டு வருகிறேன். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனையோடு பா.ஜ.க பணி ஆற்றிக் கொண்டு வருகிறது. தி.மு.கவால் இனி தமிழகத்திற்கு மாற்று சக்தியாக வரவே முடியாது. வலுவான எதிர்க்கட்சியாக இருந்தும் கூட தி.மு.கவால் செயல்பட முடியவில்லை. மாற்றுசக்தி அந்தஸ்தை எப்போதோ இழந்துவிட்டது தி.மு.க, அ.தி.மு.க, ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. நாகலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதுவரை 19 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ.கவின் ஆட்சி இனி 21 மாநிலங்களில் தொடர உள்ளது.

காங்கிரஸ் வெற்றி பெற்ற இடத்தில் நடந்த இடைத்தேர்தலில் அந்தக் கட்சியே வெற்றிபெற்ற போது, பா.ஜ.க., சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால், தேசிய அளவில் பெரும்பான்மையான மக்கள் பா.ஜ.க-வை ஒப்புக்கொண்டு உள்ளனர். இதே நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துவதற்கு கடினமாக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். இதற்காகத்தான் இந்த யாத்திரை சென்று வருகிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது பல ஆண்டுகாலப் பிரச்சினை. தற்போது காவிரிப் பிரச்சினையில் உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் தமிழகத்தின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு அதனை அரசியலாக்க முயற்சி  செய்கிறது. கேரளாவில் பம்பையாறு இணைப்புத் திட்டத்திற்கு கேரள கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் காவிரி பிரச்சினையில் போராடுவது போல கம்யூனிஸ்டுகள் நடந்து கொள்கின்றனர்.

இப்படி இருக்கும் சூழலில் குற்றம் சுமத்தவேண்டும் என்பதற்காகவே கம்யூனிஸ்டுகள் மோடி அரசை குற்றம்சாட்டுகின்றனர். நதிநீர் இணைப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தும் விதமாக கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது பா.ஜ.க அரசு' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement