சிரியா அரசுக்குக் கண்டனம் தெரிவித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சிரியாவில் அமைதியை நிலை ஏற்பட ஐ.நா. சபை  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (3.3.2018) நடைபெற்றது.
 
கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில், அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க, அந்நாட்டு ராணுவம், மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா உள்நாட்டுப் போரில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் தலையீடு உள்ளது எனக் கூறியும்,அதற்கு கண்டனம் தெரிவித்தும்,ஐ.நா சபை சிரியாவில் நடக்கும் போரை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
 
அதேபோல, சிரியாவில் போருக்கு காரணமாக செயல்படும் அமெரிக்க மற்றும் ரஷ்யப் படைகளை உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற்றி, அங்கு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். அந்த அமைப்பின் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் கலந்துக்கொண்ட பெண்கள், சிரியா படுகொலைகளுக்கு எதிராக உணர்ச்சி பொங்க பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!