ஜெயலலிதா சமாதியில் தற்கொலை செய்துகொண்ட காவலர்!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தற்கொலை செய்துகொண்ட காவலர் அருண் ராஜ்


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர். நினைவிட வளாகத்தில் அமைந்திருக்கிறது. இங்கு போலீஸார் 24 மணி நேரமும் காவல் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ஜெயலலிதா சமாதியில் இன்று (4.3.2018) அதிகாலையில் அருண் ராஜ் என்ற ஆயுதப் படை காவலர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அருண், தன்னிடமிருந்த துப்பாக்கியால் அதிகாலை 4.55 மணியளவில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலை செய்துகொண்ட அருண் ராஜ், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம்  தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!