வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (04/03/2018)

கடைசி தொடர்பு:12:30 (04/03/2018)

`பிடர்கொண்ட சிங்கமே பேசு!’ - கருணாநிதி குறித்து வைரமுத்து உருக்கம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக ஓய்வில் இருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனையின் படி, கோபாலபுரம் வீட்டிலேயே தங்கியுள்ளார். அவருக்கு சென்னை  காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது, கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருக்கிறார். உடல் நலம் தேறிய அவர், முரசொலி பவள விழாவை முன்னிட்டு ஒரு தடவை முரசொலி அலுவலம் சென்றார். அதன் பிறகு அறிவாலயம் வந்தார். கூட்டணி கட்சித் தலைவர்களைக் கோபாலபுரம் இல்லத்தில்தான் பார்த்தார். சென்னை வந்த பிரதமர் மோடியும் கோபாலபுரம் இல்லம் வந்து கருணாநிதியைச் சந்தித்து, உடல் நலம் விசாரித்தார். ஆனால், அவர் பேசுவதில்லை.

இந்தநிலையில், `` பிடர்கொண்ட சிங்கமே  பேசு’’ என்ற தலைப்பில் கருணாநிதி குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ: