’யார் காணாமல் போவார்கள் என்று கூடிய விரைவில் தெரியும்!’ - முதல்வருக்கு விஜயகாந்த் பதிலடி

’யார் காணாமல் போவார்கள் என தேர்தலுக்கு பின் பார்க்கலாம்’ என்று முதல்வருக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பதிலடிக் கொடுத்துள்ளார். 

விஜயகாந்த்
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (03/03/2018) கட்சி கூட்டம் ஒன்றில் பேசியபோது  ’பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்கு கனவு காண்கிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள்’ என்று கமல், ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். 

முதல்வர் இவ்வாறு கூறியதற்கு கமல், ரஜினி தரப்பில் பதிலளிக்காத நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.  வேலூர் மாவட்டம் அரியூறில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த் ‘யார் காணாமல் போவார்கள் என்று கூடிய விரைவில் தேர்தல் வரும் போது தெரியும். தே.மு.தி.க கட்சிகாரர்களா அல்லது அ.தி.மு.க. கட்சிகாரர்களா என்பதை தேர்தல் வரும்போது பார்ப்போம்’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!