’பல்லாங்குழி, பரமபதம், பம்பரம்...!’ - அரசு பள்ளியில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு விழா

பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சி

மதுரை யா.ஒத்தக்கடை தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு கற்றல் மற்றும் போட்டி மதுரை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயபால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

பாரம்பரிய விளையாட்டு

இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இந்த விழாவில் தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். அலங்காநல்லூர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின், கொடி ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் பச்சகுதிர, பாண்டி ஆட்டம், பல்லாங்குழி, பரமபதம், சொட்டாங்கல், கோலி குண்டு, பம்பரம், கண்ணாமூச்சு, கேரம், சிலம்பம், தப்பாட்டம், தாயம், கோ கோ, கபடி என பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் முருகேஸ்வரி உட்பட ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விளையாட்டு
 

பூலாம்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியை சார்லட் தலைமையில் பாரம்பரிய விளையாட்டுகளை பார்வையிட்டனர். ஆசிரியர் தென்னவன் கூறுகையில் " இந்த பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்கள் மறந்துவிட்டனர் செல்போனில் கேம்ஸ் விளையாடுவதும் பேஸ்புக், வாட்சப் என்று தங்கள் இளமை  பருவத்தை சுருக்கிக்கொண்டனர் , அதனை மாற்ற, அவர்களிடையே பாரம்பரிய விளையாட்டுகள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தோம் அதனால்தான் இப்படி ஒரு அழகான நிகழ்வை ஏற்படுத்தியுள்ளோம் விளையாட்டுக்கள் மூலம் மாணவர்களுக்கு சுறுசுறுப்பும் கற்பனை திறனும் வளரும்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!