வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/03/2018)

கடைசி தொடர்பு:17:00 (04/03/2018)

70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைகளோடு திருமணம்! - அமைச்சர்கள் தலைமையில் முகூர்த்த கால் நடும் விழா அமர்க்களம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தைத் தொடர்ந்து மதுரையில் பல்வேறு இடங்களில் சிறிய அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது. அ.தி.மு.க ஆலோசனை கூட்டத்துக்கு பின் தற்போது 70 ஜோடிகளுக்கு 70 சீர்வரிசைகளோடு திருமண வைபோக நிகழ்வை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆர். பி. உதயகுமார்இந்த நிகழ்வு வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, இராஜலெட்சுமி , ராஜேந்திரபாலஜி, திண்டுக்கல் சீனிவாசன் ,  அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் " ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளிய பெண்களுக்கு இலவச திருமணம் நடைபெறவுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்  இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவேரிமேலான்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இரு சக்கர வாகனம் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மேடையில் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். அந்த கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்பிக்கை உள்ளது’  தெரிவித்தார்.