வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (04/03/2018)

கடைசி தொடர்பு:20:00 (04/03/2018)

பா.ஜ.க ஆதரவு எம்.எல்.ஏ.வாக செயல்படப்போகிறாரா சரவணன்? - அதிமுகவில் சலசலப்பு

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகளே ஒட்டியும் ஒட்டாமல் இருக்கும்போது, அதிமுக எம்.எல்.ஏ.ஒருவர் பாஜக ஆதரவு நிலை எடுத்திருப்பது அதிமுகவுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிஜேபி ஆதரவு எம்.எல்.ஏவாக

அதிமுகவுக்குள் இன்னும் சிலரையும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக மாற்ற, பா.ஜ.க நேரடியாக உடைப்பு வேலைகளை செய்து வருகிறது என்கிறார்கள்.

 மதுரை தெற்குத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன் பற்றி தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். அதிமுக இரண்டு அணியாக பிரிந்தபோது, ஆரம்பத்தில் சசிகலா அணியில் இருந்து கூவத்தூர் சொகுசு விடுதியிலிருந்து தப்பித்து ஓ.பி.எஸ்.அணிக்கு தாவியவர். அதன் பின்பு பணம் கொடுத்தால் சசிகலா அணிக்கு வருவேன் என்று கூறி வீடியோ சர்ச்சையில் மாட்டியவர். அதன் பின்பு இவரை இரண்டு அணியினருமே ஒரு சந்தேகத்துடனையே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதிமுக நிகழ்ச்சிகளில் கூட பேருக்கு கலந்து கொள்வார். அவ்வளவுதான். அரசு ஒப்பந்தங்களில் எம்.எல்.ஏ. என்ற முறையில்  இவருக்கான கமிஷன் ஒதுக்கப்படுவதில்லையாம்.

இந்த நிலையில்தான் சமீபத்தில் புதுச்சேரி வந்த பிரதமர் மோடியை, அகில இந்திய சவுராஷ்டிரா சபை நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு இவரும் சந்தித்திருக்கிறார். அவரிடம் சில கோரிக்கைகள் வைத்ததாக  சொல்லபப்டுகிறது. இந்த தகவல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பி.எஸ்.சுக்கும் தெரிவிக்கப்படவில்லையாம். பிரதமரை சென்னையில் சந்திப்பதில் சில நடைமுறை சிக்கல் இருப்பதால், புதுச்சேரியில் சந்தித்தாராம். இந்த தகவலை உளவுத்துறை மூலம் தாமதமாக தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கோபம் அடைந்துள்ளார்கள். வரும் காலங்களில் பா.ஜ.க ஆதரவு எம்.எல்.வாக சரவணன் செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க