வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (04/03/2018)

கடைசி தொடர்பு:18:21 (04/03/2018)

'காஷ்மீர் - கன்னியாகுமரி; விரைவில் தாமரை மலரும்' - அடித்துச் சொல்லும் யோகி!

பிரதமர் மோடியின் வளர்ச்சியை நோக்கிய கொள்கைகளும், அமித் ஷாவின் ஒருங்கிணைக்கும் திறமை தான் வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

யோகி ஆதித்யநாத்

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயாவில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல் நாகாலாந்திலும் பா.ஜ.க கூட்டணியே ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் அதிக இடங்களை பெற்றிருந்தாலும், அங்கும் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த வெற்றியை அக்கட்சி தலைவர்கள் சிலாகித்து வருகின்றனர். 

அந்தவகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பா.ஜ.க-வின் வெற்றியை சிலாகித்து உள்ளார். அதில், "வளர்ச்சியை நோக்கிய பிரதமரின் கொள்கைகளும், அமித்ஷாவின் ஒருங்கிணைக்கும் திறமை தான் இந்தளவுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளது. வடகிழக்கில் பெற்றுள்ள இந்த வெற்றி மூலம் பா.ஜ.க மக்களை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும். சுதந்திரத்துக்கு பிறகு, முதல் முறையாக வடகிழக்கு மாநிலங்கள் தேசியளவிலான முக்கியத்துவத்தில் இணைந்துள்ளன. வருங்காலங்களில் கர்நாடகம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க