வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (04/03/2018)

கடைசி தொடர்பு:20:41 (04/03/2018)

'காவிரி மேலாண் வாரிய பணிகள் தொடங்கிவிட்டது' - மத்திய அமைச்சர் தகவல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன  என மத்திய இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன்ராம் மெஹ்வால்

சமீபத்தில் வெளியான காவிரி தொடர்பான தீர்ப்பில், 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்த நடைபெற்ற தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அனைத்துக் கட்சிகளை பிரதமர் சந்திக்க மறுக்கிறார் எனவும், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய பாஜக அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது எனவும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இது ஒருபுறம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. 

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வந்தார் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால். அப்போது, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. 6 வாரத்துக்குள் மேலாண் வாரியம் அமைக்கப்படும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க