வெளியிடப்பட்ட நேரம்: 00:52 (05/03/2018)

கடைசி தொடர்பு:01:42 (05/03/2018)

''கேள்வி கேளுங்கள்... கமல் பதில் சொல்கிறார்..!''

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவில் பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர் ஶ்ரீப்ரியா, கமிலா நாசர் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

kamal

மதுரையில் பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரை மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்தார் கமல். இந்த பொதுக்கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக பறைசாற்றினார்.  முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ராமேஸ்வரம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல், அவரது நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், மீனவர்களுடன் கலந்துரையாடினார். மதுரை பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக விழாவாக நடத்தினார். கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பட்டியலையும் கமல் அறிவித்து விட்டார். இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைத்தானத்தில் வரும் 8 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மகளிர் தின விழாவுக்கு கமல் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அதிகமான எண்ணிக்கையில் பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்த மய்யத்தின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களான நடிகை ஶ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மகளிர் தின விழா கூட்டத்தில் கமல் சிறப்புரை ஆற்றுவதுடன், பெண்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். மக்கள் நீதி மய்யம் இணைய தளத்தில் கேள்விகளை பதிவு செய்யலாம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.  கமல் கட்சியின் 2 வது பொதுக்கூட்டம் மகளிர் தின விழாவாக சென்னையில் நடைபெறுகிறது. சென்னையில் கமல் கட்சியின் 2 வது பொதுக் கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க