அலங்காரங்களுடன் பசியோடு 5 மணி நேரம் காத்திருந்த கர்ப்பிணிகள்! - சாவகாசமாக வந்த அமைச்சர்

மதுரை மாவட்டம்  பேரையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின்  மூக நலத்துறை மூலம்  சார்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழா நடத்த காலை ஒன்பது மணிக்கு நடைபெறும் என்று அதிகாரிகள் மூலம் அறிவிக்கப்பட்டு,பேரையூர், டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களை சுற்றியுள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 150க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அழைத்துவரப்பட்டு விழா மேடைமுன், நேற்று (04/03/2018) அமர வைக்கப்பட்டனர்.

கர்ப்பிணி பெண்கள்


அமைச்சர் வருகைக்காக கர்ப்பிணிப்பெண்கள் வளைகாப்பிற்கான அலங்காரங்களுடன்  மேடைக்கு முன் நாற்காலியில் ஐந்து மணி நேரமாக காத்திருந்தனர். மேலும், காலை சிற்றுண்டி வீட்டில் முடித்து வந்த பெண்களுக்கு 12 மணி அளவில் பிஸ்கட் வழங்கப்பட்டன. மேலும் போதிய குடிநீரை வழங்கவில்லை. அவர்கள் எழுந்து நடமாட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த வேதனை அடைந்தனர். கர்ப்பிணி பெண்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.வின் உலக சுகாதாரத்துறையின் உத்தரவுகளை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை. ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது கர்ப்பிணி பெண்களுக்கு உடல் மற்றும் மன ரீதியில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 

ஆர்.பி.உதயகுமார்
 

நீண்ட காத்திருப்புக்கு பின்  மதியம் இரண்டரை மணிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  விழா மேடைக்கு சாவகாசமாக  வந்தார். வந்தவர் சிறப்புரை ஆற்றிய பின்பு  வளைகாப்பு விழா துவக்கி வைத்தார். அதற்குப்பின் மதியம்  3 மணிக்கு  கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அரசு தரும் சலுகைகளுக்காக, பெண்கள் இயற்கை உபாதைகளைக் கூட எழுந்து செல்ல முடியாமல்  ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் காத்திருந்த கர்ப்பிணிகள் வெளுக்கும் வெயிலில் வீட்டுக்கு கிளம்பி சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!