தமிழகம் திரிபுராவாக மாறும்! - ஹெச்.ராஜா ஆரூடம்

பாரதிய ஜனதா கட்சி சார்பில்  மத்தியஅரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று (04/03/2018) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகம் திரிபுராவாக மாறிக்கொண்டிருக்கிறது" என்றார். 

ஹெச் .ராஜா

காவிரி விவகாரத்தைப் பொறுத்தவரையில், தி.மு.க தலைவரின் குடும்பம் ஏராளமான துரோகங்களைச் செய்துள்ளது. அதற்காக மக்களிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அதற்குள்ளாகவே காவிரி நீர் திருக்குவளையை வந்தடைந்துவிடும். தி.மு.க-வைச் சேர்ந்த 3 ராஜ்யசபா உறுப்பினர்களும், காவிரி விவகாரத்துக்காகத் தங்களின் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்கிறார்கள். ஆனால், அவர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடையவே போகிறது. காவிரி விவகாரத்துக்காக அ.தி.மு.க எம்.பி-க்களை ராஜினாமா செய்யக்கூறும் தி.மு.க, முதலில் அவர்களிடம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 90 பேரை ராஜினாமா செய்யச் சொல்லட்டுமே. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும்.

இந்தியாவின் ஈசானி மூலையான வடகிழக்கு மாநிலங்களில், தற்போது பா.ஜ.க பெற்றுள்ள வெற்றியால், அங்குள்ள குப்பைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் செய்த பிரசாரங்கள் எதுவும் எடுபடவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். இனி அவர்களால் ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி வளாகத்தில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். அன்றைக்குப் பெரியாரைப் பயன்படுத்திய, இந்து விரோத சர்வதேச கிறிஸ்துவ அமைப்புகள், இன்றைக்கு கமல்ஹாசனின் உதவியை நாடியிருக்கின்றன. வரும்காலத்தில் தமிழக மக்கள் அனைவரும் பா.ஜ.க-வின் பக்கம்தான் இருக்கப்போகிறார்கள். தமிழகம் திரிபுராவாக மாறிக்கொண்டிருக்கிறது” என்றார் ஹெச்.ராஜா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!