கமலை விமர்சிப்பது ஏன்? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

''கமல்தான் அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறார். அதனால்தான் அவரை விமர்சிக்கிறோம்'' என்று, கமலை தினம்தோறும் விமர்சித்து வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இன்றைய கணக்கில் வசைபாடினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்டங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், ''காவிரி மேலாண்மை வாரியத்தைப் பொறுத்தமட்டில் தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு நல்ல முடிவு  எடுக்கவில்லையென்றால் அடுத்தகட்ட முடிவை முதல்வர் எடுப்பார். டி.டி.வி அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாகத் தீர்ப்பு வந்தால் இரண்டு அணியும் ஒன்று சேருவது பற்றி மேல்மட்ட தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்'' என்றவரிடம், ''நீங்கள் தொடர்ந்து கமல்ஹாசனை விமர்சனம் செய்வது ஏன்?'' என்ற கேள்விக்கு, ''கமல்தான் அ.தி.மு.க-வை அழிக்க நினைக்கிறார். அவரை கருவிலே அழிக்காமல் விடமாட்டோம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒவ்வாமையான கருத்துகளைத் தெரிவித்து வருபவர். அவர் தமிழக மக்களுக்கு பாடுபடுபட மாட்டார். அம்மா மறைவுக்குப் பின்னால் கலைஞரால் செயல்பட முடியாத நிலை. அதனால் கமல் முதல்வராக நினைக்கிறார்'' எனக் கூறினார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!