வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:11:27 (06/03/2018)

`அர்ஜுன் ரெட்டி’ நாயகன் விஜய் தேவரக்கொண்டாவுக்கு ஜோடியான மெஹ்ரின் பிர்ஸாடா!

தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் நடித்த விஜய் தேவரக்கொண்டாவுக்கு பாராட்டுகள்  குவிந்தது. இந்நிலையில், அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

விஜய் தேவரக்கொண்டா - மெஹ்ரின்

அவர் தமிழில் நடிக்கவிருக்கும் இந்தப் படத்தை 'அரிமா நம்பி', 'இருமுகன்' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த சங்கர் இயக்குகிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தின் கதாநாயகியாக சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' மெஹ்ரின் பிர்ஸாடா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மெஹ்ரினின் முதல் தமிழ் படமான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் ஹீரோயின் வரும் காட்சிகள் கதையின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் அவர் நடித்த காட்சிகளை எடிட் செய்து படம் ரிலீஸ் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க